”கமலின் பேச்சு எடப்பாடியின் பலவீனத்தை காட்டுகிறது” - கேப்பில் கிடா வெட்டும் நாஞ்சில் சம்பத்!!

 
Published : Aug 15, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
”கமலின் பேச்சு எடப்பாடியின் பலவீனத்தை காட்டுகிறது” - கேப்பில் கிடா வெட்டும் நாஞ்சில் சம்பத்!!

சுருக்கம்

nanjil sampath supports kamal

தமிழகத்தில் ஊழல் நடைபெறுவதாக கூறும் கமலஹாசன் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும், அவரின் இத்தகைய குற்றசாட்டுகள் முதலமைச்சரின் பலவீனத்தை காட்டுகிறது எனவும் டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை எனவும் கமலஹாசன் அன்மை காலங்களில் விமர்சித்து வந்தார். 

அதன்படி தற்போது 3 டுவிர்களை பதிவு செய்துள்ளார். அதில், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது எனவும், தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஊழலில் இருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் நாம் இன்னும் அடிமைகளே எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் ஊழல் நடைபெறுவதாக கூறும் கமலஹாசன் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும், அவரின் இத்தகைய குற்றசாட்டுகள் முதலமைச்சரின் பலவீனத்தை காட்டுகிறது எனவும்  தெரிவித்தார். 

மேலும், கமலஹாசன் அதிமுக மீது தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!