
ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில், இன்றும் நாம் அடிமைகளே என்றும், புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவுள்ளவர்கள் வாருங்கள், வெற்றி பெறலாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் மேலும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளர்.
நடிகர் கமல் ஹாசன், அண்மை காலமாக தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் நேரடியாக தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார். அவரின் இந்த விமர்சனத்துக்கு அதிமுகவில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ராஜினாமா செய்யும் அளவுக்கு குற்றங்கள் மலிந்து கிடக்கிறது. குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், அம்மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்? முதல்வர் செய்வாரா? எனவும் கமல் டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கமல் மேலும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே என்றும், புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர்கள் வாருங்கள், வெற்றி பெறலாம் என்றும் கமல் அழைப்பு விடுக்கும் வகையில் டுவிட்டர் பதிவு வெளியாகி உள்ளது.