பொங்கலுக்கு அஜித் படமா? ரஜினி படமா? எந்த படம் ஓடும்... நாஞ்சில் சம்பத் சூப்பரான பதில்....

Published : Jan 08, 2019, 08:49 PM ISTUpdated : Jan 08, 2019, 08:59 PM IST
பொங்கலுக்கு அஜித் படமா? ரஜினி படமா? எந்த படம் ஓடும்... நாஞ்சில் சம்பத் சூப்பரான பதில்....

சுருக்கம்

ரஜினியின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' இந்த இரண்டு படத்தில் எது ஓடும் என முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் தலை சிறந்த அரசியல் தலைவரும் நடிகருமான நாஞ்சில் சம்பத்  கூறியுள்ளார்.

அந்த பேட்டியில், நீங்க நடிக்கும் 'எல்.கே.ஜி.' பொங்கலுக்கு வரவில்லையே? எனக் கேட்டதற்கு, ரஜினி நடித்த 'பேட்ட', தம்பி தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' வருவதால் இப்போது வரவில்லை. இடைவெளிவிட்டு வெளியிடலாம் என நினைத்திருக்கிறார்கள். 

'பேட்ட', 'விஸ்வாசம்' படங்கள் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இரு படங்களின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பொங்கலுக்கு இந்தப்படம் ஓடும் 'பேட்ட', 'விஸ்வாசம்' படம் ஓடுமா எனக் கேட்டதற்கு,  இளைய தலைமுறையைச் சார்ந்த தம்பிகளெல்லாம் தல அஜீத்தினுடைய ரசிகர்கள்தான். அஜீத்தை நம்பி எடுக்கப்பப்பட்ட படம். அஜீத்துக்காகவே எடுக்கப்பட்ட படம் 'விஸ்வாசம்'. 


 
ரஜினியின் 'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கென்று தமிழகத்தில் ஒரு செல்வாக்கு இருக்கிறது. இன்று வாலிபர்களை வசீகரித்திருக்கின்ற கதாநாயகர்களில் அவரும் ஒருவர். படம் தயாரிக்கிறார். அவருடைய களிறு போன்ற கண்களும், அவருடைய தத்ரூபவமான நடிப்பும், அவருக்கு ஒரு பெரிய வரவேற்பை தமிழகத்தில் தந்திருக்கிறது.

அதேபோல, சுப்பிரமணியபுரம் இயக்குனர் சசிக்குமாரும் நடித்திருக்கிறார். அதனால் ரஜினிக்காக ஓடாவிட்டாலும், விஜய் சேதுபதி, சசிக்குமாருக்காக அந்தப் படம் ஓடும். அதனால் இரண்டு படங்களுமே ஓடும் எனக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!