அச்சத்தில் உறைந்து கிடக்கும் அடிமைகள் தினகரனை பார்த்ததும் எழுந்து நிற்கும்... நாசா ஆவேசம்

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
அச்சத்தில் உறைந்து கிடக்கும் அடிமைகள் தினகரனை பார்த்ததும் எழுந்து நிற்கும்... நாசா ஆவேசம்

சுருக்கம்

Nanjil sambath exclusive interview against edappadi palanisamy

சுயேட்சையாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள  தினகரன் வரும் 8-ஆம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் தனி ஆளாக பங்கேற்க உள்ளார். தினகரன் தனி ஒரு ஆளாக சட்டசபைக்குள் செல்ல இருப்பதை தமிழகமே எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. 

தினகரனின் வருகையால் ஆளும் தரப்பு சற்று கலக்கமடைந்துள்ளது, தினகரனை சட்டசபையில் எப்படி சமாளிப்பது என MLA க்கள் அமைச்சர்கள் என எல்லோருக்கும் ஆலோசனைகளை  வழங்கினார்கள்.  

மேலும், தினகரன் சட்டசபைக்குள் வரும்போது அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தினகரனுக்கு வணக்கம் செலுத்துவோ, அவரை பார்த்து சிரிக்கவோ, தலையாட்டுவதோ கூடாது, அதே போல அவர் நமக்கு எதிராக அதாவது ஆட்சியை குறை சொல்லி பேசினால் சபையில் அமளியில் ஈடுபடக்கூடாது என  ஆளும் தரப்பு அட்வைஸ் செய்தது.

இந்நிலையில், பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத்; தினகரன் வரும் போது அவர்கள் எழுந்து நிற்பார்கள். இப்படித்தான் அன்றைக்கு கவுரவர்கள் சபைக்கு கண்ணன் வந்தான். கவுரவர்கள் சபைக்கு உள்ளே கண்ணன் வருகிறபோது யாரும் எழுந்திருக்கக் கூடாது என்று துரியோதனன் சொன்னான். ஆனால் கவுரவர்கள் சபைக்குள்ளே கண்ணன் வந்தபொழுது முதலில் எழுந்து நின்றவன் துரியோதனன். அதுதான் தமிழ்நாட்டில் நடக்கப்போகிறது என்றார்.

மேலும் பேசிய அவர், சசிகலா, தினகரனால் அரசியலில் வாழ்வு பெற்ற இந்த அடிமைகள் இன்றைக்கு ஆரவாரம் செய்கிறார்கள். இவர்கள் தினகரனுக்கு நேருக்கு நேராக நிற்கிற தகுதியே இல்லாதவர்கள். அச்சத்தில் உறைந்து கிடக்கும் இந்த அடிமைகளின் புலம்பலை 8-ஆம் தேதி நாம் கேட்க போகிறோம் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மகாராஷ்டிரா துணை முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 5 மணிக்கு பதவியேற்பு... ஒன்றிணையும் NCP..!
விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?