பீட்டாவுக்கு ’உம்; கொட்டிய ரஜினி...! ரசிகர்களை ஏமாற்றியதால் அதிருப்தி...! 

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 04:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
பீட்டாவுக்கு ’உம்; கொட்டிய ரஜினி...! ரசிகர்களை ஏமாற்றியதால் அதிருப்தி...! 

சுருக்கம்

Letter to Rajini the beta system should stop curry

கறி விருந்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பீட்டா அமைப்பு ரஜினிக்கு கடிதம் அனுப்பியதை தொடர்ந்து கிடா வெட்டு கிடையாது, விருந்து இருக்கு என ரஜினி ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது. 

நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு டிசமபர் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். 

அப்போது, டிசம்பர் 31 ஆம் தேதி அரசியலுக்கு வருகிறேன் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார். 

முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார். 

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். 

மேலும் ரசிகர்களுக்கு கறிவிருந்து கொடுக்க ஆசை எனவும் ஆனால் ராகவேந்திரா மண்டபமான இங்கு அதை தன்னால் செய்யமுடியவில்லை எனவும் குறிப்பிட்டார். 

இதைதொடர்ந்து மதுரையில் சுமார் ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி விருந்து கொடுக்க ரஜினி ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வரும் 7 ஆம் தேதி நடக்கவிருக்கும் ரசிகர்களுக்கான ஆட்டுக்கறி விருந்தை தடுத்து நிறுத்த கோரி நடிகர் ரஜினி காந்துக்கு பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியது. 

இதனால் கிடா வெட்டு கிடையாது, விருந்து இருக்கு என ரஜினி ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்..!
'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?