நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நடக்குமா..? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Oct 18, 2019, 12:47 PM IST
Highlights

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நாங்குநேரி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், நாங்குநேரி தொகுதியில் அக்டோபா் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நான் இந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். 

இந்நிலையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சா்கள் நாங்குநேரியில் முகாமிட்டு, வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளனா். ஆனால் அவர்களைத் தடுக்கவோ, தொகுதியில் இருந்து வெளியேற்றவோ தோதல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகையைச் சூழலில் தேர்தல் நடத்துவது முறையாக இருக்காது. எனவே நாங்குநேரி தேர்தல் தொடா்பாக தோதல் ஆணையம் செப்டம்பா் 21-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் - தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நாங்குநேரி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!