கோட்டை விட்ட  திமுக ,  கொத்திச்சென்ற  சின்னம்மா தரப்பு!! - மீண்டும் இன்னோவா சம்பத் ஆன கதை!!!

First Published Jan 7, 2017, 11:25 PM IST
Highlights


 அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கான காட்சிகளை கடந்த டிசம்பர் 5 முதல் தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர்.

நேற்றுவரை நடுநடுங்கி பத்திரிக்கையாளர்களை பார்த்து பேட்டி என்றாலே காத தூரம் ஓடிய அமைச்சர்கள் எல்லோரும் கூவி கூவி பேட்டி அளிப்பதும் , ஜெயலலிதா என பெயர் சொல்வதும் , சின்னம்மா அன்று அப்ரூவர் ஆகியிருந்தால் என்று பேட்டி கொடுப்பதும் வாடிக்கையாகி வருவதை பார்த்து தொண்டர்கள் மலைத்து போய் நிற்கின்றனர்.

மறுபுறம் ஓபிஎஸ் முதல் அவைத்தலைவர் வரை ஒட்டுமொத்தமாக நீங்கள் தான் என சசிகலாவை பொதுச்செயலாளராக்கியது அதையும் தாண்டி சில அமைச்சர்கள் முதல்வராகவும் வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்

. ஆனால் தொண்டர்கள் மனோ நிலை வேறு மாதிரியாக இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் , ஃபேஸ்புக்கில் சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். மீம்சாக போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 
 ஒரு மாதத்திற்குள் கட்சியில் வேகமாக நடந்த மாற்றத்தை தொண்டர்கள் ஜீரணிக்க தயாராக இல்லை. இதன் விளைவு கட்சிக்குள்ளும் சிலர் சின்னம்மாவை ஏற்க மாட்டோம் என்று வெளியேறினார்கள். முதலில் விந்தியா , அனந்தராஜ் , நாஞ்சில் சம்பத் என தொடர்ந்தது.
நாவலர் என தன்னை அழைத்து கொள்ளும் மேடை பேச்சாளரான சம்பத் முதலில் போனை சுவிட்ச் ஆஃப் செய்தார் , பின்னர் திமுகவினரை சந்தித்தார். திமுகவுக்கு போகபோவதாக பேச்சு எழுந்தது. 
அதன் பின்னர் தனது இன்னோவா காரை மீண்டும் கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து இன்று முதல் என்னை இன்னோவா சம்பத்துன்னு கூப்பிடாதீங்கப்பா என்று சொன்னார். மதிமுகவில் இவரது சகாக்ககள்  ஜோயல் , டாக்டர் சரவணன் இவரை அணுகி திமுகவுக்கு வரச்சொல்லி கேட்டு கொண்டனர்.

ஸ்டாலினும் சம்பத்தை இணைத்துகொள்ள சம்மதம் தெரிவித்ததன் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது. அப்போது சம்பத் அவர்களிடம் நான் லட்சக்கணக்கில் கடனில் இருக்கிறேன் என்று சூசகமாக தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.
 ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே சசிகலாவை கருவாடு மீனாகாது , காடை மயிலாகாது கறந்த பால் மடிபுகாது , என்றெல்லாம் பேசி எனது தகுதிக்கு அவரை பொதுச்செயலாளராக ஏற்று பணியாற்ற முடியாது என்றெல்லாம் அனைத்து சானல்களுக்கும் பேட்டியும்  அளித்தார்.
ஆனால் சசிகலா தரப்புக்கு தெரியும் எதற்கும் ஒரு விலை உண்டென்று அந்த விலை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். செங்கோட்டையன் , பி.எச்.பாண்டியன் , கேபி முனுசாமி யை விடவா . சின்னம்மா தரப்பில் சரியான ஒருவர் முன்பு கட்சியில் பெரிய பொறுப்பில் இருந்த சின்னம்மாவின் உறவினர் என்கிறார்கள், அவரது வழிகாட்டுதலின் பேரில் சுலபமாக மீண்டும் சம்பத் சசிகலாவை சந்தித்தார்.
சம்பத் போன்றவர்கள் வெளியில் இருந்தால் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். எரிகிற தீயில் நன்றாக எண்ணெய் ஊற்றுவார் அதுவும் திமுகவுக்கு போய் விட்டால் கேட்கவே வேண்டாம் என்று நினைத்தன் விளைவே சம்பத் மீண்டும் இன்னோவா சம்பத் ஆன கதை.

வழக்கம் போல் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற எதிரிகள் புறமுதுகிட்டு ஓட தனது பணி யை துவக்க உள்ளதாக பேட்டியும் கொடுத்துவிட்டார்.

click me!