
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அதற்கான உறுப்பினர் அட்டையையும் வாங்கி கொண்டார் நடிகை நமிதா. பின்னர் தேர்தல் பிரச்சாரமும் செய்தார். அதிமுகவின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை நமிதா.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 41 நாளாக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை பாதிப்பு பற்றி கேள்விபட்டது முதல் அதிமுக தலைமை கழக பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி முதல் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி , கோகுல இந்திரா , சென்னையில் உள்ள மகளிர் அணியினர் , கவுன்சிலர்கள் என பெரிய பட்டாளமே அப்போலோ மருத்துவமனையில் கிடக்கிறது.
ஆனால் நடிகை நமிதா இதுவரை எட்டி கூட பார்க்கவில்லை. கட்சியின் முக்கிய உறுப்பினர் , பேச்சாளர் என பதவியை வாங்கிகொண்டு முதல்வர் இருக்கும் மருத்துவமனை பக்கம் கூட எட்டி பார்க்காத நமிதா என தொண்டர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. கடை திறப்பு விழா , ஆடியோ லாஞ்சுக்கு போக முடியுது அம்மா இருக்கும் மருத்துவமனைக்கு ஒரு முறை கூட வர முடியாதா என அதிமுக நிர்வாகிகள் அவரை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் விரைவில் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார் என கூறப்பட்டது. இதனால் பயந்து போன நடிகை நமீதா முதல்வரின் உடல் நிலை குறித்து அறிய அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். உடல் நலம் குறித்த விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நமீதா, முதல்வர் பினிக்ஸ் பறவை மாதிரி, மீண்டும் திரும்ப வருவார்கள் . நல்ல உடல் நலத்திடன் இருக்கிறார் என்று தெரிவித்தார். முழு உடல் நலம் பெற்று மீண்டும் அம்மா மக்களுக்கு நல்லது செய்வார் வணக்கம், நன்றி என்று பேட்டி அளித்தார்.
டெய்ல் பீஸ்: நமிதா கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஆனால் அவர் சாதாரண பேட்டியை பேப்பரில் எழுதி வைத்துகொண்டு அதை படித்தார். பேச்சுவது போல் அவருக்கு ஆங்கிலத்தில் எழுதி கொடுத்ததை அவர் அப்படியே தமிழில் படித்தார்.