‘ஆண்கள் சந்தோஷப்படப்போறாங்க’... டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக ‘மச்சான்ஸ்’ நமீதா பரப்புரை!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 28, 2021, 10:55 AM IST
‘ஆண்கள் சந்தோஷப்படப்போறாங்க’... டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக ‘மச்சான்ஸ்’ நமீதா பரப்புரை!

சுருக்கம்

நேற்று மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. கடும் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஐடியாக்களுடன் வேட்பாளர்கள் களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 


சுயேட்சை வேட்பாளர்கள் முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வரை காய்கறி விற்பது, பாட்டு பாடுவது, நாற்று நடுவது, தோசை சுடுவது, மீன் பொறிப்பது என வாக்கு சேகரிக்க பகுதிகளில் தினுசு, தினுசான டெக்னிக்குகளை முயற்சித்து வருகின்றனர். அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளில் அவர்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான நமீதா தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 

கோவை தெற்கில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமீதா, அங்கிருந்த மாணவர்களுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நேற்று மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருப்பாயூரணியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நமீதா, மச்சான்ஸ்... மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணன், அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். அவர் ரொம்ப நல்லவர். 350 பேருக்கு இலவசமாக சர்ஜரி செய்திருக்கிறார். அவருக்கு தாமரை சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள். அப்போதுதான் 6 சிலிண்டர்கள் இலவசமாகக் கிடைக்கும். அதில் பிரியாணி ஆக்கி சாப்பிடலாம். சாப்பிட என்னையும் கூப்பிடுங்கள், ஆனால் நான் வெஜிடேரியன். வாஷிங் மிஷின் கொடுக்கப் போறோம். இதனால் ஆண்கள் சந்தோஷப்படுவார்கள். அரசு வேலையும் கிடைக்கும். அதற்கு தாமரை சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!