4 மாவட்டங்கள்.. ! நான்கே நாள்..! தேர்தல் களத்தை புரட்டிப்போட்ட ஜான் பாண்டியன்..! உற்சாகத்தில் அதிமுக..!

By Selva KathirFirst Published Mar 28, 2021, 10:53 AM IST
Highlights

தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பிற்கு பிறகு அந்த சமுதாயத்தினர் மத்தியில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு இருந்த நல்ல வரவேற்பை தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் வாக்குகளாக மாற்றி வருவது ஆளும் தரப்பை உற்சாகப்படுத்தியுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பிற்கு பிறகு அந்த சமுதாயத்தினர் மத்தியில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு இருந்த நல்ல வரவேற்பை தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் வாக்குகளாக மாற்றி வருவது ஆளும் தரப்பை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியன் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு கடந்த பத்து நாட்களாக தீவிரமாக தேர்தல் பணியில் இருந்த ஜான் பாண்டியன் தற்போது அதிமுக – பாஜக கூட்டணிக்கான பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளார். ராமநாதபுரத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கிய முதல் நாளே அதிரடி பேச்சுகளால் அரசியல் களத்தை அவர் சூடாக்கினார். அதிலும் பட்டிலியன வெளியேற்றத்தின் முதல் படியாக ஏழு ஜாதிகளை சேர்ந்தவர்களை ஒன்றாக்கி தேவேந்திர குள வேளாளர் எனும் அறிவிக்க வகை செய்யும் மசோதா கடந்த 19ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு அது சட்டமாகும். இதனை தனது பிரச்சாரத்தின் போது செல்லும் இடம் எல்லாம் மிகவும் எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் ஜான் பாண்டியன் பேசி வருகிறார். ஏழு ஜாதிகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவித்தாலும் அவர்கள் பட்டியலினத்தில் தானே நீடிக்கப்போகிறார்கள்? என்று திமுக கூட்டணிக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் தான் செல்லும் இடங்களில் எல்லாம் முதலில் ஒன்னாம் கிளாஸ் பாஸ் ஆனால் தான் ரெண்டாம் கிளாஸ் போக முடியும்.

அதன்படி நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது நாம் ஒன்னாம் கிளாஸ் பாஸ் ஆனதற்கு சமம் என்று ஜான் பாண்டியன் தெரிவிக்கிறார். அடுத்தாக ரெண்டாம் கிளாஸ் சென்றுள்ள நிலையில் விரைவில் அதிலும் பாஸ் ஆகி பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்கள் வெளியேறுவார்கள் என்று ஜான் பாண்டியன் கூறும் போது கூடியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

அத்தோடு திமுக தலைவராக இருந்த கருணாநிதி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேற்றத்தின் போது வெளிநடப்பு செய்து தங்கள் சமுதாய மக்களுக்கு திமுக எம்பிக்கள் துரோகம் செய்துவிட்டனர் என்றும் ஜான் பாண்டியன் பேசுவது எடுபடுகிறது. அத்தோடு பட்டியலின வெளியேற்ற்ததிற்காக 40 வருடங்களாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடியால் வெற்றி கிடைத்துள்ளதாகவும் எனவே அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களித்து நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜான் பாண்டியன் பேசுவதை அப்படியே தேவேந்திர குல வேளாளர் மக்கள் வழிமொழிகின்றனர்.

ஏற்கனவே ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஜான் பாண்டியன் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டார். அத்தோடு தனது கட்சி நிர்வாகிகளை தேவேந்திர குல வேளாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் சிந்தாமல் சிதறாமல் அதிமுக கூட்டணி தேவேந்திர குல வேளாளர் குல வாக்குகளை அள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. நான்கே நாட்களில் களத்தை மாற்றிப்போட்ட ஜான் பாண்டியனால் உற்சாகமாகியுள்ள அதிமுக மேலிடம், மதுரை, தேனி மாவட்டங்களிலும் அவரை பிரச்சாரம் செய்யுமாறு அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

click me!