திமுக, அதிமுக எந்த கட்சியும் இல்லை.. ‘கெத்து’ காட்டும் ஒரே வேட்பாளர்.. வெற்றியும் அவருக்குத்தான்..

By Raghupati R  |  First Published Feb 5, 2022, 12:32 PM IST

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 


1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி-அதிமுக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் 9 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நிலையிலும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வேட்பாளர்களை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் வரை வேட்பு மனுதாக்கல் மிகவும் மந்தமாகவே இருந்தது.

Latest Videos

undefined

கடந்த 2 நாட்களாகவே அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வந்தன. அதனால் நேற்று முன்தினம் முதல் வேட்பு மனுதாக்கல் விறுவிறுப்பு அடைந்தது. கடந்த 2-ந்தேதி வரை 2,563 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 7,590 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 27,365 பேர் மனுதாக்கல் செய்தனர். மாநகராட்சியில் 4,805 பேரும், நகராட்சியில் 8,646 பேரும், பேரூராட்சியில் 13,914 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

நேற்று வரை மொத்தம் 37,518 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சியில் 6,477 பேரும், நகராட்சியில் 11,663 பேரும், பேரூராட்சியில் 19,378 பேரும் இதுவரை மனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு மனுதாக்கல் செய்ததால் வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

நேற்று மனுதாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர்களும், மற்ற கட்சிகளில் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்யாத வேட்பாளர்களும் இன்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று திரண்ட அரசியல் கட்சியினர். மேலும் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக குவிந்தனர். அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் அனைவருமே இன்று ஒரே நேரத்தில் திரண்டதால் வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் இன்று திருவிழா போல கூட்டம் காணப்பட்டது.

மேலும் அரசியல் கட்சிகளில் சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக இன்று மனு தாக்கல் செய்ய வந்தனர். அதிருப்தி வேட்பாளர்களால் மோதல் ஏற்படக்கூடும் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் நேற்று  வழக்கத்தை விட கூடுதலான அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சனிக்கிழமையான இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வார்டு வாரியாக இந்த பணி நடக்கிறது. அப்போது வேட்பாளர் அல்லது முன் மொழிபவர் என யாராவது ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு வருகிற 7-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

பல்வேறு இடங்களில் பலமுனை போட்டியும், சில இடங்களில் 2 முனை போட்டியும் நிலவுகிறது. இந்நிலையில் நாமக்கல்லில் ஒரு பெண்மணி போட்டியின்றி தேர்வாக உள்ளார்.நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்திற்கும் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக விடுதலை சிறுத்தை மற்றும் சுயேட்சை வேட்பாளர் என அனைத்து வேட்பாளர்கள் சார்பிலும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல்லில் உள்ள 25 வார்டில் உறுப்பினராக ஒரே ஒரு தேவி என்கின்ற பெண்மணி மட்டும் மனுதாக்கல் செய்துள்ளார். இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

click me!