
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை கொலை செய்யலாமா? இந்து தெய்வத்தை பற்றி யாராவது தவறாக பேசினால் அவரை கொலை செய்ய கூட நாம் தயாராக இருக்க வேண்டும் என்று நெல்லையில் ஜீயர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கொலைவெறிப் பேச்சு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டாள் விவகாரம் தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன்;
வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள், நான் உங்களுக்கு ரூ.10 லட்சம் தருகிறேன் என்று கூறினால் என்னை சும்மா விட்டுவிடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.
நாக்கின் மேல் பல்லை போட்டுக் கொண்டு நமது இந்து தெய்வத்தை பற்றி யாராவது தவறாக பேசினால் அவரை கொலை செய்ய கூட தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆண்டாள் பற்றி இழிவாக பேசிய வைரமுத்து அவருக்க ஆதரவாக குரல் கொடுக்கும் வீரமணி போன்றவர்களை நம் நாட்டை விட்டே துரத்தி அடிக்க வேண்டும்.
மடிசார் கட்டியவர்களுக்கு சின்ன பிரச்சினை என்று சொன்னால் நயினார் நாகேந்திரன் போன்ற தொண்டர்கள் உருவெடுத்து வருவார்கள். மதுரையில் இந்தி எதிர்ப்பு மாநாடு, இங்கு யாராவது ஒரு மாநாட்டை நடத்திவிட்டு உயிரோடு திரும்ப முடியாது என கர்வமாக சொன்னார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அதேபோல நாமும் செயல்பட வேண்டும்.
இன்று ஜீயர்களே போராட்டம் நடத்துகின்றனர் என்றால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என அர்த்தம். இனி இந்து மதத்தை பற்றி யாரும் தவறாக பேசக் கூடாது என்பதற்காக கோயில்களில் யாகம் நடத்துங்கள். இந்து தர்மத்தை பழித்துப் பேசும் கருணாநிதி, வைரமுத்து, வீரமணி போன்றோர் இனி இவ்வாறு பேச கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள் என்று நான் கூறியதற்கு என் மீது வழக்கு போடுவார்கள். ஆனால், வைரமுத்து மீது தமிழக அரசு ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தமிழகத்தில் இனி ஒரு ஆட்சி வர வேண்டும் என்றால் அது நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியாக தான் இருக்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர். ஆண்டாள் குறித்து பேசிய வைரமுத்துவை கொலை செய்யலாமா? இந்து தர்மம் குறித்து இழிவாக பேசிய திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது கூடாது. தேர்தல் வரும்போது இந்துக்கள் தங்களது அதிகார பலத்தைக் காட்ட வேண்டும் என பேசினார் நயினார் நாகேந்திரன்.