எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கியதே பாஜகதான் என முன்னாள் அமைச்சர், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கியதே பாஜகதான் என முன்னாள் அமைச்சர், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஒவ்வொரு தலைவர்களின் மறைவுக்குப் பின்னரும் அதிமுகவில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன. ஜெ மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தது, இரண்டைத் தலைமையின் கீழ் அக்காட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளன.
இதையும் படியுங்கள்: அருண்விஜய்யின் யானையில் இருந்து வெளியான புதிய வீடியோ..தெறிக்கவிடும் ரசிகர்கள்!
இரட்டை தலைமை காரணத்தினால் எந்த முடிவையும் துரிதமாக எடுக்க முடியவில்லை, எந்த ஒரு முடிவையும் வலுவாக தீர்க்கமாக எடுக்கமுடியவில்லை, இதனால்தான் கட்சியை பலவீனப்பட்டிருக்கிறது என்ற கருத்து அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் தீவிரமாகி இருந்து வருகிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அக்கோரிக்கையை உறுதியாக முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவால் அது தடைபட்டது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டு அரசை பாஜகவால் அசைத்துக் கூட பார்க்க முடியாது.. குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா அதிரடி.
எனவே எதிர்வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒற்றைத் தலைமை முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிளவுபட்டுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாட்டை பாஜகவினர் தலையிட்டு களையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
முன்னதாக சசிகலா சிறைக்கு சென்றபோது எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சி பொறுப்பு வந்தது, மறுபுறம் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திவந்தார். அப்போது பன்னீர்செல்வமும்- எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து செயல்பட வேண்டுமென பாஜக வலியுறுத்தி வந்தது, அதன் எதிரொலியாக அப்போது இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ் இபிஎஸ்சின் கரங்களை பிடித்து இணைத்து வைத்தார். அதிமுக ஆட்சியில் நான்கு வருடங்கள் தொடர்ந்து நீடிக்க பாஜக உறுதுணையாக இருந்து செயல்பட்டு வந்தது. அதன் காரணமாகவே நான்கு ஆண்டு ஆட்சியை பாஜக எந்த தடையுமின்றி வெற்றிகரமாக நடத்தி முடித்தது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வரிசையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையும் பாஜகா தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்றும், ஆனால் பாஜக தலையீடே இதில் இருக்காது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் இன்று திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுகவில் ஒவ்வொரு தலைவர்களின் மறைவுக்குப் பின்னரும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்துள்ளதுடன், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் என கூறினார். அவரின் இந்த கருத்து அதிமுக பாஜக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இக்கருத்தை விவாதித்து வருகின்றனர்.