தமிழ்நாட்டு அரசை பாஜகவால் அசைத்துக் கூட பார்க்க முடியாது.. குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா அதிரடி.

By Ezhilarasan Babu  |  First Published Jun 30, 2022, 7:49 PM IST

தமிழ்நாட்டில் வலுவான அரசு அமைந்துள்ளது என்றும் பாஜக  தமிழ்நாட்டு அரசை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்  யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் வலுவான அரசு அமைந்துள்ளது என்றும் பாஜக  தமிழ்நாட்டு அரசை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்  யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். அரசியலமைப்பிலுள்ள கூட்டாட்சித் தத்துவம் பாஜக ஆட்சியில் ஆட்டம் கண்டுள்ளது என்றும் ஆளுநர்கள் குடியரசுத் தலைவரின் பிரதிநிதிகளாக இல்லாமல் மத்திய பாஜக அரசின் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி  முருமுவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்கி உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே… யார் இவர்?

இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அந்த வரிசையில் யஷ்வந்த் சிங்கா ஒவ்வொரு மாநிலத்திலும் தனது ஆதரவு கட்சிகளிடம் நேரில் ஆதரவு கோரி வருகிறார்.

அந்த வரிசையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோர அவர் சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரை காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கோரினார்.

இதையும் படியுங்கள்: துணை முதல்வராகிறாரா தேவேந்திர ஃபட்னாவிஸ்? பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுவது என்ன?

அப்போது ஸ்டாலினுடன் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய யஷ்வன் சின்ஹா தமிழ்நாட்டில் வலுவான ஆட்சி அமைந்துள்ளது, தமிழ்நாடு அரசை பாஜகவால் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது, தேர்தலை ஆயுதமாக வைத்து பாஜக தனது பலத்தை மறைமுகமாக பெருக்கிக் கொள்கிறது. அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சி தத்துவமே பாஜக அரசால் ஆட்டம் கண்டுள்ளது, இதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு கடமை நமக்கு உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளுநர்கள் மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஆளுநர்கள் குடியரசுத் தலைவரின் பிரதிநிதிகளாக இல்லாமல் பாஜக அரசியல் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். அது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிலமை தமிழகத்திலும் உள்ளது. இவற்றை நாம் சீர்படுத்த வேண்டிய கடமை உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

click me!