உள்ளாட்சி தேர்தலில் திமுக உருட்டுக்கட்டை அராஜகத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் திமுக உருட்டுக்கட்டை அராஜகத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி பாஸ்கரன் என்பவர் நெல்லை திமுக எம்பி ஞான திரவியம் தம்மை தாக்கியதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆகையால் திமுக எம்பி ஞான திரவியத்தை கைது செய்ய கோரி பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டு கைதானார்.
இந் நிலையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரனை சந்தித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் கட்சியின் பாஸ்கரன் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியதால் திமுக எம்பி மூர்க்கமாக தாக்கி உள்ளார்.
எப்பொழுது திமுக ஆட்சியில் அமர்கிறதோ, அப்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் உருட்டுக்கட்டை அராஜகம் நடக்கும். அடிபட்டவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது அதிசயம். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.