நடிகை ரோஜா பதவி பறிப்பு.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி..!

Published : Jul 18, 2021, 06:09 PM ISTUpdated : Jul 19, 2021, 02:58 PM IST
நடிகை ரோஜா பதவி பறிப்பு.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி..!

சுருக்கம்

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவருக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரோஜாவுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த அதிரடி உத்தரவால் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா வகித்து வந்த தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவருக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரோஜாவுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்பதியில் இருந்து வந்தனர்.

இதனை அறிந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறை  தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்தார். அதன்படி எம்எல்ஏக்கள் இரண்டு பதவிகளை வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் பறித்துள்ளார். அதில், எம்எல்ஏ ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!