29 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு... செங்கோட்டையன் அதிரடி!

By vinoth kumarFirst Published Jan 29, 2019, 11:28 AM IST
Highlights

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் 29 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் 29 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு தரப்பில் இருந்து பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும், ஆசிரியர்கள் செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து இந்தப்  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என அரசுத் தரப்பில் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் ஏற்கனவே 447 ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 600 ஆசிரியர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மொத்தமாக 1047 ஆசிரியர்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை சார்பில் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அரசு எச்சரி்கைக்கு பணிந்து 96 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர்.

 

இதனையடுத்து பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறி என எச்சரித்து வந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் 29 காலியிடங்கள் உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

click me!