நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய திமுக... மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jan 28, 2021, 10:40 AM IST
Highlights

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றவர். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து, அக்கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி அடுத்தடுத்து விலகினர். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,   இராமநாதபுரம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி - மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சு.அமர்நாத் - வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.இரமேஷ் -  திருவாடானை தொகுதி பொருளாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், வெளிநாடுவாழ் இந்தியர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், எம்.பி., சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தது தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளிக்கையில்;- திராவிட இயக்கங்களும், தமிழ் தேசிய இயக்கங்களும் ஒத்த கருத்துடைய நிலையில் தான் செயல்படுகின்றன என கருதுகிறேன். அரசியல் சூழல் தான் திமுகவில் இணைய காரணம். திராவிடம் சார்ந்த கொள்கையில் இணைந்து பயணிப்பது தான் எனது திட்டம். என்னுடைய சுயமரியாதைக்கு உட்பட்டு தான் இதில் இயங்க உள்ளேன். இந்த அமைப்பிற்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன்"எனத் தெரிவித்தார்.

click me!