தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே மைத்ரேயன் எம்.பி. தர்ணா...!

 
Published : Jun 15, 2017, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே மைத்ரேயன் எம்.பி. தர்ணா...!

சுருக்கம்

Mythreyan is opposite the Election Commission Office

டெல்லி தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் காரை உள்ளே விட மறுத்ததால், மைத்ரேயன் எம்.பி. தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இதையடுதது, கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. மைத்ரேயன் எம்.பி., தற்போது முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியில் இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுமே தங்கள் அணிகளுக்கு சாதகமாக ஆவணங்களை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மைத்ரேயன் எம்.பி. காரில் வந்துள்ளார். ஆனால், அவரின் காரை உள்ளே அனுமதி காவலர்கள் மறுத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைத்ரேயன் எம்.பி., அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தேர்தல் ஆணைய அலுவலகத்தின் எதிரே நாற்காலி ஒன்றில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!