நாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கி குண்டுகளுடன் நுழைந்த மர்ம நபர்..!! பதறிபோய் நின்ற காவலர்கள்.!!

Published : Mar 05, 2020, 09:39 PM IST
நாடாளுமன்றத்திற்குள்   துப்பாக்கி குண்டுகளுடன்  நுழைந்த மர்ம நபர்..!! பதறிபோய் நின்ற காவலர்கள்.!!

சுருக்கம்

டெல்லி நாடாளுமன்றத்திற்குள் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.  

T.Balamurukan

டெல்லி நாடாளுமன்றத்திற்குள் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில்,நாடாளுமன்ற நுழைவு வாயில் எண் 8 ல், பார்வையாளர்களை உள்ளே அனுமதிப்பதற்கான சோதனை நடைபெற்ற போது, சுமார் 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரிடம் இருந்து 0.32 ரக துப்பாக்கிக்குண்டுகள் மூன்றை பாதுகாவலர்கள் கைப்பற்றினர்.  இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.  அவர் தன்னுடைய துப்பாக்கிக்குண்டுகளை வீட்டில் வைப்பதற்கு மறந்து விட்டு வந்து விட்டதாக பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தார். 

இந்த நிலையில் அவரது பதிலால் திருப்தியடையாத பாதுகாவலர்கள் அவரை டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் அக்தர் கான். அவர் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர். வந்தது.அவர்  அங்கீகரிக்கப்பட்ட ஆயுத உரிமம் பெற்றிருப்பதும், நாடாளுமன்ற நிகழ்வுகளைப் பார்வையிட முறையான அனுமதிச் சீட்டு வைத்திருந்ததும் தெரிய வநதது.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..