தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்... சபாநாயகர் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 5, 2020, 6:14 PM IST
Highlights

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் 4-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இரு அவைகளும் முற்றிலுமாக முடங்கியது. 

தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க சபாநாயகர் தடை விதித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் 4-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இரு அவைகளும் முற்றிலுமாக முடங்கியது. 

இந்நிலையில், இன்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். மேலும், சபாநாயகர் இருக்கையில் ரமாதேவி அமர்ந்து தற்காலிகமாக அவையை நடத்தி இருந்தார். அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் பேப்பர்களை சபாநாயகரை நோக்கி வீசினர். இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் சபாநாயகரின் கவனத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, அவை நடவடிக்கையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகை, டி.என்.பிரதாபன், தீன்கொரியா கோஷ், உன்னிதன், தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாக்கூர், குர்ஜித்சிங், பென்னி ஆகியேரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 

click me!