இந்து முன்னணி நிர்வாகி காருக்கு மர்ம நபர்கள் தீ..!! பதட்டத்தில் திருப்பூர்.!!

Published : Feb 12, 2020, 10:48 AM IST
இந்து முன்னணி நிர்வாகி காருக்கு மர்ம நபர்கள் தீ..!! பதட்டத்தில் திருப்பூர்.!!

சுருக்கம்

திருப்பூர்,  இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் கோட்டச் செயலாளராக இருப்பவர் மோகன்.இவர் ,இந்த பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அவரது கார் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

By: T.Balamurukan

திருப்பூர் நீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் வீட்டின் அருகே கார் நிறுத்துவது வழக்கம். அதிகாலையில் கார் தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதை அருகில் உள்ளவர்கள் பார்த்து பதறிப்போய் ,தூங்கிக்கொண்டிருந்த மோகனை எழுப்பியிருக்கிறார்கள்.உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் வந்து சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்திருக்கிறார்கள். கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடு போல் ஆகிவிட்டது.

 தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, இந்து முன்னணி நிர்வாகியின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் ஊருக்குள் காட்டு தீ போல் பரவியதை அடுத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மோகன் வீட்டு முன்பாகத் திரண்டனர். மேலும், காருக்குத் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி  சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!