2014ல் ஆதரவு..! 2019ல் எதிர்ப்பு..! பாஜக – விஜய் மோதல் துவங்கியது எங்கு..? ஒரு பரபர பின்னணி..! Part – 5

By Selva KathirFirst Published Feb 12, 2020, 10:33 AM IST
Highlights

மீண்டும் வருமான வரித்துறை சோதனை. ஒரு கைதியை போல் காரில் விஜயை இரண்டு அதிகாரிகள் கூட்டிச் செல்கின்றனர். தனது வீட்டிற்குள் செல்லும் போது ஏதோ ஒரு பெரும் குற்றத்தை செய்துவிட்டது போல் தன் கைகளால் முகத்தை மறைத்துக் கொள்கிறார் விஜய். அதாவது காருக்குள் விஜய் கதறினார் என்கிற அஜித் ரசிகர்களின் ஒரு கற்பனையை கிட்டத்தட்ட உண்மையாக்கினார் விஜய். ஆம், அழைத்துச் செல்வது வருமான வரித்துறை அதிகாரிகள். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எதற்காக விஜய் காருக்குள் தனது முகத்தை மறைக்க வேண்டும்.

தற்போது வருமான வரித்துறைக்கு காரணம் பாஜக தான் என்றாலும் அதனை விஜய் எதிர்கொண்டிருக்கும் விதம் கேலிக்கூத்தானது.

மீண்டும் வருமான வரித்துறை சோதனை. ஒரு கைதியை போல் காரில் விஜயை இரண்டு அதிகாரிகள் கூட்டிச் செல்கின்றனர். தனது வீட்டிற்குள் செல்லும் போது ஏதோ ஒரு பெரும் குற்றத்தை செய்துவிட்டது போல் தன் கைகளால் முகத்தை மறைத்துக் கொள்கிறார் விஜய். அதாவது காருக்குள் விஜய் கதறினார் என்கிற அஜித் ரசிகர்களின் ஒரு கற்பனையை கிட்டத்தட்ட உண்மையாக்கினார் விஜய். ஆம், அழைத்துச் செல்வது வருமான வரித்துறை அதிகாரிகள். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எதற்காக விஜய் காருக்குள் தனது முகத்தை மறைக்க வேண்டும்.

போதாக்குறைக்கு காரின் ஜன்னல்கள் அனைத்தும் கருப்பு நிற தடுப்புகளால் மறைக்கப்பட்டிருந்தது. அதாவது விஜயை அதிகாரிகள் தனி ஆளாக சுற்றி வளைத்துள்ளனர். அவரது போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் விஜயதால் தனது தந்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை. வழக்கம் போல் பிரச்சனையை தனியாளாக எதிர்கொள்வது எப்படி என்று விஜய்க்கு தெரியவில்லை. தன்னை அறியாமல் தன்னை தானே ஒரு குற்றவாளி என்று கருதி விஜய் தனது முகத்தை மூடிக் கொள்கிறார்.

இவர் தான் தமிழகத்தின் மாஸ் ஹீரோ. ரஜினிக்கு போட்டியாளர். ஏன் ரஜினியை வசூலில் முந்தியவர். உண்மையில் விஜயின் போட்டியாளரான அஜித் வருமான வரித்துறையை எதிர்கொண்ட விதம் மிகவும் சுவாரஸ்யமானது. அவர் ஜஸ்ட் லைக் தேட் அதிகாரிகளை எதிர்கொண்டதுடன் அவர்களை லந்தடித்து அனுப்பி வைத்தார். இந்த விஷயத்தில் அஜித் அளவிற்கு கூட விஜய் விவரம் இல்லாதவர் என்கிறார்கள். மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் விஜய்க்கு உண்டு. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனை விஜய் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை. ஆனால் நெய்வேலியில் தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை கூட்டி ஏதோ புதிதாக ஒன்றை நிரூபித்துக் காட்டியுள்ளார் விஜய். ரெய்டு நடைபெற்று மூன்று நாட்களுக்கு பிறகு விஜய் படப்பிடிற்கு வந்து இரண்டு நாட்களுக்கு பிறகு சுற்றுவட்டார பகுதிகளில் இரந்து விஜய் ரசிகர்கள் நெய்வேலியில் குவிந்து அவரது தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களாம். பெரிதும் மெனக்கெடல் இல்லாமலேயே இது ஏற்பாடு செய்து வரவழைக்கப்பட்ட ஒரு கூட்டம் என்பதை தெரிந்து கொள்ளலாம். விஜயை பார்க்கத்தான் அவரது ரசிகர்கள் கூடியுள்ளார்கள் என்றால் படப்பிடிப்பு சுமார் ஒரு வார காலமாக நடைபெறுகிறதோ ஒருவரையும் காணவில்லை.

ஆனால் வருமான வரித்துறை சோதனை முடிந்து விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தினத்தில் கூட்டம் வந்திருந்தால் கூட ஓகே தலைவரை பார்க்க இவ்வளவு பேர் கூடிவிட்டனர் என்று ஒரு புரமோசன் செய்யலாம். ஆனால் விஜய் பிரச்சனையில் சிக்கி படப்பிடிப்பில் கலந்து கொண்ட 2வது நாள் கூடும்கூட்டம் என்றால் எப்படி? இயல்பாகவே அவரது ரசிகர் மன்ற ஏற்பாடு தான். மேலும் இப்படி நடிகர்களை பார்க்க தமிழகத்தில் கூட்டம் கூடுவது பெரிய விஷயமே இல்லை.

மேலும் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் ரசிகர்களை வரவழைப்பது தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு அரசியல். ரஜினிஎப்போதும் இதை செய்தது இல்லை. கமலும் கூட செய்தது இல்லை. விஜயகாந்தும் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகும் கூட தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசிகர்களை பயன்படுத்தியது இல்லை. ஆனால் விஜய் முதல் முறையாக ரசிகர்களை வரவழைத்து தனது செல்வாக்கை காட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால் இதெல்லாம் தாத்தா காலத்து டெக்னிக்.

ரஜினி தமிழகத்தில் இல்லை மராட்டியத்தில் சூட்டிங் நடத்தினாலும் அங்கு கூடும் கூட்டம் வேற லெவல். சிவாஜி படத்திற்காக மராட்டியத்தில் புனே அருகே ஒரு ரயில்வே டிராக்கில் ரஜினியை வைத்து ஷங்கர் சூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ரயில் அவர்களை கடந்து சென்றது. அந்த ரயில் அடுத்த ரயில் நிலையத்தில் நின்ற போது இறங்கி ஒரு பெரும் கூட்டம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஓடி வந்தது. காரணம் ரஜினிகாந்த். அதனால் படப்பிடிப்பு தளத்திற்கு கூட்டத்தை கூட்டுவது எல்லாம் பெரிய மாஸ் ஆகிவிடாது.

click me!