தூங்கும் பெண்களை ஜட்டி போட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் மர்ம ஆசாமி... நள்ளிரவில் உலாவும் சைக்கோ..!

Published : Aug 02, 2021, 06:50 PM IST
தூங்கும் பெண்களை ஜட்டி போட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் மர்ம ஆசாமி... நள்ளிரவில் உலாவும் சைக்கோ..!

சுருக்கம்

ஜட்டி மட்டுமே அணிந்து நள்ளிரவில் பெண்கள் தூங்குவதை சுவர் ஏறிக் குதித்து ரசிக்கும் மர்ம ஆசாமியால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜட்டி மட்டுமே அணிந்து நள்ளிரவில் பெண்கள் தூங்குவதை சுவர் ஏறிக் குதித்து ரசிக்கும் மர்ம ஆசாமியால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மதுரை புறநகர் பகுதியில் உள்ளது வளர்நகர் பகுதி. இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அந்தப்பகுதி பெண்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜட்டி மட்டுமே அணிந்த மர்ம ஆசாமி இரவு நேரங்களில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தூங்கும் பெண்களை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து ரசிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். திரும்பி போகும்போது பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்று விடுகிறார். கடந்த ஒரு மாதத்தில் ஐந்து வீடுகளில் இந்த மர்ம ஆசாமி புகுந்துள்ளார். இதனால் மதுரையில் பீதி நிலவுகிறது.

 

மதுரை வளர்நகர் பகுதியில், மர்ம ஆசாமி சேலையை கழுத்தில் தொங்கவிட்டபடி செல்லும் சிசிடிவி கேமரா பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை வளர்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் போலீசாரிடம் கொடுத்தனர். அந்த நபர் சைக்கோவாக இருக்கலாம் என்று போலீஸார் கூறுகின்றனர். சிசிடிவி ஆதாரத்தை வைத்து அந்த மர்ம ஆசாமியை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!