தமிழக மக்களுக்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் கருணாநிதி.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த புகழாரம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 6:17 PM IST
Highlights

அறியாமைக்கும், வறுமைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி, மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர், அவரது முயற்சியால் தான் தமிழ் செம்மொழியாக  மாறியது. அரசியல் மட்டுமல்ல திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி,

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவப்படத்தை தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பின்னர் மேடையில் அவர் பேசியதாவது: கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன், இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் மு. கருணாநிதி அவரிட் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன் என தமிழில் பேசினார். 

சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இந்த சட்டமன்றம் உதவியாக இருந்துள்ளது. தேவதாசி முறை ஒழிப்பு, பள்ளிகளில் இலவச உணவு உட்பட பல சமூக முன்னேற்றத்திற்கான சட்டங்கள் இந்த அவையில் இயற்றப் பட்டுள்ளது. தனது புரட்சிகரமான எண்ணங்களால், சமூக சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி. இந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக அவர் கருதப்படுகிறார். உண்மையிலேயே இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள்,  ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை முடிவுசெய்வதில் சட்டமன்ற மிகவும் சிறப்பான அமைப்பாக உள்ளது. அறியாமைக்கும், வறுமைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி, மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர், அவரது முயற்சியால் தான் தமிழ் செம்மொழியாக  மாறியது. 

அரசியல் மட்டுமல்ல திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி, அவர் ஒவ்வொரு செயலும் சிந்தனையும் மக்களின் முன்னேற்றத்திற்காக அமைந்தது. அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை கருணாநிதியிடம் நாம் காணமுடியும். அவரை கொள்கைகளை பின்பற்றி நடப்பதுதான் நாம் செலுத்துகின்ற உன்மையான மரியாதை. புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி தமிழக மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவர் வழியில் நாம் நடப்போம். இவ்வாறு அவர் பேசினார். 

 

click me!