சத்ரபதி சிவாஜியைவிட அதானி பெரிய இவரா..? விமான நிலையத்தில் சிவசேன செய்த பரபரப்பு சம்பவம்..!

Published : Aug 02, 2021, 06:13 PM IST
சத்ரபதி சிவாஜியைவிட அதானி பெரிய இவரா..? விமான நிலையத்தில் சிவசேன செய்த பரபரப்பு சம்பவம்..!

சுருக்கம்

எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கினர்

மும்பை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த தொழிலதிபர் அதானி பெயர் கொண்ட பலகையை சிவசேனா கட்சியினர் உடைத்து எறிந்தனர்.

மும்பையில் உள்ள விமான நிலையத்தின் பெயரை அதானி என பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தின் பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கினர். இந்தியாவில் உள்ள ஏழு விமான நிலையங்களை மத்திய அரசு அதானி குழுமத்திடம் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் மும்பை விமான நிலையத்தைக் கடந்த ஜூன் 13ஆம் தேதியிலிருந்து அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி என்ற பெயரை மாற்றி அதானி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். மேலும் விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

இதுகுறித்து சிவசேனா கட்சி எம்.பி., அரவிந்த் சாவந்த் ‘’மும்பை விமான நிலையத்தில் அதானி பெயரை முன்னிலைப்படுத்துவது சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் செயல்’’எனத் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!