ஆண்டவா.. மும்பை விமான நிலையத்திற்கு அதானியின் பெயர்.. அடித்து நொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்..

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 5:09 PM IST
Highlights

இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் அதானி விமான நிலையம் என வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். மராட்டியர்களின் அடையாளமான சத்ரபதி சிவாஜி மகாராஜ்யின் பெயரை மாற்றப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மும்பை விமான நிலையத்தில் அதானி விமான நிலையம் என  வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சிவசேனா கட்சித் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விமான நிலையம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம்  என்ற பெயரை இயங்கிவருகிறது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமம் கைப்பற்றியது. இதனையடுத்து அதானி விமான நிலையம் என மும்பை விமான நிலைய வளாகத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் அதானி விமான நிலையம் என வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். மராட்டியர்களின் அடையாளமான சத்ரபதி சிவாஜி மகாராஜ்யின் பெயரை மாற்றப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி நிறுவனம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்புதான் பெற்றது. நிர்வாக பொறுப்பு கைக்கு வந்தவுடனேயே சத்ரபதி சிவாஜியின் பெயர்ப்பலகை மாற்றப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் நாட்டில் உள்ள முக்கிய ஏழு விமானங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் அதானி நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல மற்ற விமானங்களில் பெயர்களும் மாற்றப்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையோ மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் பாஜகவின் மேலவை உறுப்பினர் பிரசாத் லாட் சிவசேனாவை தொண்டர்கள் பாஜகவினர் தொண்டர்களை தாக்கினால், திருப்தி அடிப்பதுடன், சிவசேனாவின் கட்சி தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கவும் தயங்க மாட்டோம் என எச்சரித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, பாஜகவின் இது போன்ற பேச்சுக்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும், மீண்டு எழ முடியாத அளவிற்கு பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!