திமுக ஆட்சிக்கு வர இவர்கள் தான் காரணம்... அட்ராசிட்டி செய்யும் அமைச்சர் நாசர்..!

Published : Aug 02, 2021, 04:13 PM IST
திமுக ஆட்சிக்கு வர இவர்கள் தான் காரணம்... அட்ராசிட்டி செய்யும் அமைச்சர் நாசர்..!

சுருக்கம்

சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர். ஆனால், கடந்த காலங்களில் அதிமுக, பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் கஷ்டங்கள் தரப்பட்டுள்ளது. 

கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ம் ஆண்டின் ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர்;- இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர். 

சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர். ஆனால், கடந்த காலங்களில் அதிமுக, பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் கஷ்டங்கள் தரப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் உள்ளோம். இதுதான் மதநல்லிணக்க ஒற்றுமை. இந்தியாவில் வசிக்கும் மக்கள் பல்வேறு மொழிகள், மதங்களை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வரும் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் திமுக ஆட்சிக்கு வந்தது என்றார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!