தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.. கர்நாடக முதல்வருக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..!

By vinoth kumarFirst Published Aug 2, 2021, 3:19 PM IST
Highlights

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு ஆதரவாகவும், பொம்மைக்கு காட்டமாகவும் மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு ஆதரவாகவும், பொம்மைக்கு காட்டமாகவும் மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகம் கர்நாடகா இடையே காவிரி தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் புதிய முதல்வராக பதவியேற்றதுமே காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என உறுதியாகத் தெரிவித்தார். கர்நாடக முதல்வரின் இந்தப் பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.. மேலும், மேகதாதுவில் அணைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம். மேகதாது அணையை கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை  மேககாது அணையை நாங்கள் கட்டியே தீருவோம். மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் குறித்து எனக்கு கவலை இல்லை. யாராவது உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என கூறியுள்ளார். இதனால், கர்நாடகா மற்றும் தமிழக பாஜகவினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாகவும், பொம்மைக்கு காட்டமாகவும் மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் பொம்மை'' என்பதை சுட்டிக்காட்டி '' தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது என பதிவிட்டுள்ளார். 

click me!