சசிகலா நிலைப்பாட்டை பொறுத்து எனது அரசியல் நிலைபாடு... அதிமுக கூட்டணி கட்சி அதிரடி..!

By vinoth kumarFirst Published Jan 26, 2021, 7:25 PM IST
Highlights

கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கு இருந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரியும். தற்போது அங்கு நடைபெற்றதை நான் கூறமாட்டேன். அதற்கென்று நேரம் காலம் வரும் போது கூறுவேன் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கு இருந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரியும். தற்போது அங்கு நடைபெற்றதை நான் கூறமாட்டேன். அதற்கென்று நேரம் காலம் வரும் போது கூறுவேன் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான் இரட்டை இலை சின்னத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். அதன்படி தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையில் நாம் தலையிட கூடாது.

சசிகலா தன்னை முதல்வராக்கவில்லை எம்.எல்.ஏ.க்கள் தன்னை முதல்வராக்கியுள்ளனர் என்று முதல்வர் கூறிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாஸ் கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கு இருந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரியும். தற்போது அங்கு நடைபெற்றதை நான் கூறமாட்டேன். அதற்கென்று நேரம் காலம் வரும் போது கூறுவேன்.

சசிகலா முதலில் வெளியே வரவேண்டும் அவர்கள் வெளியே வந்த பிறகு அவர்களின் மனநிலை என்ன என்பதை கூற வேண்டும். முக்குலத்தோர் புலிப்படைக்கு அரசியல் அங்கீகாரம் அளித்து கடந்த  கடந்த சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பளித்ததில் சசிகலாவும் ஒருவர். அவர் வெளியே வந்த பிறகு அவர் என்னை நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை பார்த்த பிறகு என்னுடைய நிலைப்பாடு இருக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

click me!