என் காலு தரையில நிக்கல... மனசு பறக்குது மேல... மு.க.ஸ்டாலின் செம ஃபீலிங்..!

By Thiraviaraj RMFirst Published Sep 28, 2019, 4:02 PM IST
Highlights
மனதோ வியப்பிலும், பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயானை போல் பறந்து, உயர்ந்து சென்றது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கீழ்டி பயணம் குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘’கீழடியில் நின்றிருந்த போது மனதோ வியப்பிலும், பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயானை போல் பறந்து, உயர்ந்து சென்றது. கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும், செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள்.

அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும், பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம். பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு இடவசதியை விரைந்து உருவாக்கித் தரவேண்டும்.

 தமிழ்நாடு தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் ஆசைத்தம்பி ஆகியோரின் உதவியுடன் கீழடி ஆய்வுகளின் சிறப்புகளை அறிய முடிந்தது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறப்பான நகர நாகரீகத்தைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ்ந்ததைக் காண முடிந்தது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறு மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டிருக்கிறேன். 

 மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் தெரிவித்திருக்கிறேன். அதற்கான இடவசதியை மாநில அரசு விரைந்து உருவாக்கித் தரவேண்டும். கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்தியுள்ள 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகளை அவர்கள் வெளியிட வேண்டும்’’ என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!