நாங்குநேரிக்கு தங்கமணி... விக்கிரவாண்டிக்கு சிவி!! தொகுதிக்கு 50 சி... திமுகவை திணறவிடப்போகும் பட்ஜெட்!! ரணகளத்திற்கு தயாரான ர.ர.,க்கள்!

By sathish kFirst Published Sep 28, 2019, 3:36 PM IST
Highlights

விக்கிரவாண்டியில் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையிலும், நாங்குநேரியில் அமைச்சர் தங்கமணி தலைமையிலும் களப்பணியில் கலக்கப் போகிறார்களாம். தொகுதிக்கு 50 கோடி  ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதால், ரத்தத்தின் ரத்தங்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்களாம். 
 

நடக்கவுள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக, திமுகவின் கவுரவ பிரச்சனையாக மாறும் அளவிற்கு மாறியுள்ளது. திமுகவை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலால் ஒரு பயனும் இல்லை, ஆனால் தவறவிட்டால் அடுத்து நடக்கக்கூடிய தேர்தலில் கெத்தாக சொல்லிக்கொள்ளும்படியாக உபிக்கள் குஷியாக வேலை ஏற்கமாட்டார்கள் என்பதால் மெனக்கெடுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை ஏனோ, தானோ என சாதாரணமாக இதை எடுத்துக்கொள்ளாமல்,  சீரியஸாக களமிறங்கி தட்டித் தூக்க பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளது. அதிமுகவின் மெகா பட்ஜெட் திமுகவை திக்குமுக்காட விட்டுள்ளதென்றே சொல்லலாம்.

அதிமுகவை பொறுத்தவரை மொத்த செலவையும் கட்சியே ஏற்கும் என்பதால், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் சிலரும் இந்த இரண்டு தொகுதிகளிலும் நிற்க வாய்ப்பு கேட்டிருந்தார்கள். விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் லெட்சுமணன், ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த அவர் விக்கிரவாண்டி தொகுதியை  கேட்க, சிவி சண்முகம் ஆட்டையை கலைத்துவிட ஓபிஎஸ்சும் கூட கடுப்பாகும் சூழல் நிலவியது.

இது எங்க ஏரியா அதனால நாங்க சொல்றவங்க தான் வேட்பாளரா இருக்கணும், அப்போதான் நாங்க இறங்கி களத்துல இறங்கி வேலைபார்க்க பண்ண முடியும், எப்போவுமே கெத்து மிஸ் ஆகாமல் பேசும் சிவி அமைச்சராக இருப்பதால், எடப்பாடி வேறுமாதிரி ரியாக்‌ஷன் காட்டிவிடுவார்.என்பதாலும், ஏரியா அவங்களோடது. யாரையும் பகைத்துக்கொள்ளாத விரும்பிய எடப்பாடி குறிப்பாக சிவி சண்முகத்த்தை விட்டுக்கொடுக்காத எடப்பாடியும்,  சண்முகம் கைகாட்டிய முத்தமிழ்ச்செல்வனை வேட்பாளராக்கினார் எடப்பாடி. 

அதேபோல, நாங்குநேரி தொகுதியில் கணிசமான அளவில் கிறிஸ்துவர்கள் வசிப்பதால் தனக்கு வாய்ப்பு வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கேட்க, ஓ.பி.எஸ் தரப்பும், சில நாடார் அமைப்புகளும் ஆதரவாகவே இருந்தனர். ஆனால், சசிகலாவுக்கு எதிரானவர் மனோஜ் பாண்டியன் என்பதால், எதிர்காலத்தில் சிக்கலாகும் என்று எடப்பாடியிடம் பற்ற வைத்தது மட்டுமில்லாமல், முன்னாள் எம்.பி-யான பிரபாகருக்கு வாய்ப்பு கொடுக்க சொன்னதாம். அவரும் இந்து நாடார்தான்’ என மனோஜ் பாண்டியனுக்கு செக் வைத்த அதே கோஷ்டி, இந்து நாடாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று எடப்பாடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். கணேசன், பெரியபெருமாள் இருவரின் பெயரை மட்டுமே லிஸ்டில் இருந்தது, கடைசியாக அறிவிப்பு கூட வருமென்று எதிர்பார்த்தனர். ஆனால், லிஸ்ட்டில் இல்லாத நாராயணன் பெயர் அறிவிக்கப்பட்டதில் ரரக்கள் பயங்கர ஷாக்.

விக்கிரவாண்டியில் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையிலும், நாங்குநேரியில் அமைச்சர் தங்கமணி தலைமையிலும் களப்பணியில் கலக்கப் போகிறார்களாம். தொகுதிக்கு 50 கோடி  ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதால், ரத்தத்தின் ரத்தங்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்களாம். அதிமுகவின் பட்ஜெட் சமாச்சாரத்தை கேட்ட உபிக்கள் பயங்கர ஷாக்கில் இருக்கிறார்களாம் .

click me!