என்னால ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. சரண்டரான திமுக எம்.பி பரபரப்பு விளக்கம்.

Published : Oct 11, 2021, 01:04 PM ISTUpdated : Oct 11, 2021, 04:50 PM IST
என்னால  ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. சரண்டரான திமுக எம்.பி பரபரப்பு விளக்கம்.

சுருக்கம்

வீண்பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் எனக் கருதிதான் தான் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன் என திமுக எம்பி ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

வீண்பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் எனக் கருதிதான் தான் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன் என திமுக எம்பி ரமேஷ் விளக்கமளித்துள்ளார். திமுக மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவது நெருடலாக உள்ளது என கூறி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- 

என்னுடைய முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த திரு. கோவிந்தராஜ் என்பவர் மரணம் தொடர்பாக, சிபிசிஐடி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு இருப்பது என் மனதுக்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.

இதையும் படியுங்கள்: 15 வயது மாணவனுடன் 41 வயது டீச்சருக்கு ஏற்பட்ட பயங்கர காதல்... அடிக்கடி உடலுறவு... கர்ப்பம், விசாரணையில் பகீர்.

இதையும் படியுங்கள்: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண்... அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.

ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டும் என கருதி சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன், என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரம் அற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!