ஆட்சி இல்லனா என்ன? இதை உற்சாகமா கொண்டாடுறோம்.. ஓபிஎஸ். இபிஎஸ் கூட்டாக எடுத்த சூப்பர் முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 11, 2021, 12:50 PM IST
Highlights

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் தனிமனித இடைவெளியை பின்பற்றியும், அதிமுக பொன்விழா கொண்டாடப்படும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. 

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் தனிமனித இடைவெளியை பின்பற்றியும், அதிமுக பொன்விழா கொண்டாடப்படும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடுவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் முழு விவரம் பின்வருமாறு:- 

அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை படைத்திட்ட  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற 17-10-2021 அன்று பொன்விழா காண இருக்கும் நிலையில், கழகத்தின் பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர திரு எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழகத்தில் இன்று காலை திங்கட்கிழமை தலைமை கழக நிர்வாகிகள் கழக  வழிகாட்டு குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது, மேலும் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி மற்றும் கிளை வார்டு வட்டார அளவிலும் கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கழகத்தின் பொன்விழா ஆண்டை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!