மோடி அணிந்த வேட்டிக்கு வரவேற்பு... மோடி போட்ட குப்பைகளுக்கு எதிர்ப்பு... இது இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்!

By Asianet TamilFirst Published Oct 13, 2019, 9:23 PM IST
Highlights

மத்திய அரசு போட்ட குப்பைகளுக்கு உடந்தையாக மாநிலத்தில்  அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாகும். தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் என அனைத்தையுமே இந்த அரசு பறிகொடுத்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும்.

தமிழா்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் பிரதமா்  நரேந்திர மோடி வேட்டி, சட்டை அணிந்து வந்தது வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “இந்தியா-சீனா இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை இ.கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. இந்தியாவுக்கு சீனாவுக்கு இடையேயான வர்த்தகத்தை சமநிலைப்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இதைச் செய்ய வேண்டும். தமிழா்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் பிரதமா்  நரேந்திர மோடி வேட்டி, சட்டை அணிந்து வந்தது வரவேற்கத்தக்கது. 
இதேபோல கோவளம் கடற்கரையில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கடற்கரையில் சிதறிக் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றியதும் வரவேற்கதக்கது. உயா் பொறுப்பில் இருப்பவா்கள் இவ்வாறு செய்வது மிகவும் நல்லது. அதே வேளையில் மோடியால் கொட்டப்பட்ட குப்பைகள் ஏராளம் உள்ளன.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அவர் அறிவித்தது, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற குப்பைகளை மோடி அரசு கொட்டியது. அதன் விளைவாக இந்தியாவில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்ஓது வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது.இதுபோன்ற மோடி போட்ட குப்பைகளை அகற்ற அவர் முன்வரவேண்டும். 
மத்திய அரசு போட்ட குப்பைகளுக்கு உடந்தையாக மாநிலத்தில்  அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாகும். தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் என அனைத்தையுமே இந்த அரசு பறிகொடுத்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும்” என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

click me!