முத்தலாக் தடைச்சட்டம் …. முதன் முதலாக மூன்று வழக்குகள் பதிவு !!

By Selvanayagam PFirst Published Aug 3, 2019, 8:05 AM IST
Highlights

முத்தலாக தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு முதன்முதலாக மூன்று இய்லாமிய ஆண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் தடை சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் அடுத்த நாளான நேற்று நாட்டில் மூன்று இஸ்லாமிய ஆண்கள் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மும்பை விக்ரோலி பகுதியைச் சேர்ந்த ஜென்னத் பட்டேல் என்ற பெண் தனது கணவர் இம்தியாஸ் குலாம் பட்டேல் என்பவருக்கு எதிராக புகார் கொடுத்தார். தனக்கு வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்துவிட்டு இன்னொரு பெண்ணை குலாம் திருமணம் செய்துகொண்டார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார். 
இதன் அடிப்படையில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த பிரிவுகளிலும் இம்தியாஸ், அம்மா, சகோதரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இக்ராம் என்பவர் மீது அவரது மனைவி ஜுமிரட் புகார் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்துகொண்ட என்னிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மதுராவில் இருக்கும் எங்கள் உறவினர்களை இக்ரம் தொந்தரவுகொடுத்தார்” என நுஹ் போலீஸிடம் முன்பே புகார் கொடுத்துவிட்டு, ஜுமிரட் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இருவரும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பலமுறை கவுன்சிலிங் கொடுத்தும் சரிப்பட்டு வரவில்லை.


போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவுடனேயே ஜுமிரட் டை பார்த்து முத்தலாக் சொல்லிவிட்டார் இக்ரம். இதையடுத்து ஜூலை 30 ஆம் தேதி மீண்டும் ஜுமிரட் போலீசை நாடினார். அதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் சப் இன்ஸ்பெக்டர் ருச்சி தியாகி.

முத்தலாக் தடை சட்டத்தில் மூன்றாவது வழக்கும் ஹரியானா மாநிலத்தில் அதே நுஹ் மாவட்டத்தில் 23 வயதான சலாவூதின் தன் மனைவியிடம் போனில் தலாக் சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!