நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. 100க்கு 100% உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்கணும்.. முதல்வர்

By vinoth kumarFirst Published Aug 8, 2021, 12:33 PM IST
Highlights

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் என அறிவுரை வழங்கியள்ளார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளராக  ஒருவரையோ அல்லது இரண்டு பேரையோ நியமிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

மக்களிடம் திமுகவுக்கு உள்ள நல்லபெயரை பயன்படுத்தி  உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற பாடுபட வேண்டும் என 9 மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், விடுப்பட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனையை முதல்வர் வழங்கினார். அதில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாம் முதல் தேர்தலை சந்திக்கிறோம்.

மக்கள் மத்தியில் நமக்கு நல்லபெயர் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்தி 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் என அறிவுரை வழங்கியள்ளார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளராக  ஒருவரையோ அல்லது இரண்டு பேரையோ நியமிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த தேர்தல் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகிகளும், கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

click me!