MK Stalin: சொன்னீங்களே ஸ்டாலின்.. செஞ்சீங்களா..? முதல்வருக்கு எதிராக கொதிக்கும் முஸ்லிம்கள்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2021, 7:17 AM IST
Highlights

சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. 

சிறையில் வாடக்கூடிய அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்கின்ற தீர்மானம், உடனே செயல்வடிவத்திற்கு வந்திட வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உருவாக்கி தருவதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி தமிழக அரசின் உள்துறை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு கடந்த காலங்களில் வாழ்நாள் சிறை வாசம் அனுபவித்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கையை தகர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல் கட்சிகளிடம் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. 

இந்நிலையில், கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பது தங்கள் குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்டாலின் அண்ணா என்று பேச தொடங்கிய அபுதாஹிர் தங்கை, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அவர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது உங்களுடைய ஆட்சி தனியாட்சி. நீங்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. அப்படி இருக்கையில் எங்களது சகோதரர்களை ஏன் விடுதலை செய்யாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். உங்களது காரணம் சரியாக இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.  இந்நிலையில் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய இயலாத வகையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

"

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது முஸ்லிகள் மத்தியில் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
அதில், சிறையில் வாடக்கூடிய அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்கின்ற தீர்மானம், உடனே செயல்வடிவத்திற்கு வந்திட வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உருவாக்கி தருவதற்கு தயாராக இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.

click me!