
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின், பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கட்சியில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படுகிறது. இதில், சின்னத்தை மீட்க வேண்டும் என ஒரே காரணத்துக்காக இரு அணிகளும் இணைவதாக கூறுகின்றனர்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சில நிபந்தனைகளை முன் வைத்தனர். அதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, இதுவரை இரு அணிகள் இணைவது குறித்த பேச்சு வார்த்தை நடக்காமல் இருக்கிறது.
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்க சென்ற மர்மநபர்கள், காவலாளி கொலை படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயலலிதாவின் சமையல் காரராக வேலை செய்த 80 வயது முதியவரை மர்மநபர்கள் சரமாரியாகதாக்கி தலையில் அரிவாளால் வெட்டி, கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனால், அதிமுக வட்டாரத்தில் மட்டுமின்றி, அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிவகங்கையை சேர்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (80). கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டில் சமையலராக வேலை பார்த்தார். ஜெயலலிதாவின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற இவர். இதனால், இவரது பேரனுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார்.
பஞ்சவர்ணத்தின் மகன் முருகேசன். ஜெயலலிதா ஆட்சியின் போது, செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தற்போது சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக வேலை பார்க்கிறார். சைதாப்பேட்டையில் உள்ள மகன் முருகேசன் வீட்டில், பஞ்சவர்ணம் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பஞ்சவர்ணம் நேற்று காலை நடைபயிற்சி சென்று வீடு திரும்பினார். அங்கு, வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். ய்து விட்டு, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 5 பேர்,திடீனெர பயங்கர ஆயுதங்களால், பஞ்சவர்ணத்தை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் பஞ்சவர்ணத்தின் தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்து, படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினரும், உறிவினர்களும் ஓடிவந்தனர். அவர்களை கண்டதும், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடி கொண்டிருந்த பஞ்சவர்ணத்தை, மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின்படி சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கொடநாடு காவலாளி கொலை, முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலி, மற்றொரு குற்றவாளியான சயான் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகச்சை என பல பரபரப்பு அடங்குவதற்குள், ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.