பாமகவுடன் ரஜினி ஆதரவாளர்களை இணைத்து வைத்த முரசொலி மூலப்பத்திர விவகாரம்... அதிரும் அரசியல் களம்..!

Published : Jan 31, 2020, 12:31 PM IST
பாமகவுடன் ரஜினி ஆதரவாளர்களை இணைத்து வைத்த முரசொலி மூலப்பத்திர விவகாரம்... அதிரும் அரசியல் களம்..!

சுருக்கம்

பாமக கிளப்பிய இந்த விவகாரத்தை ரஜினி ஆதரவாளர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே பாபா படத்தின் போது ராமதாஸ் ஆட்கள் அவரை கடுமையாக எதிர்த்தனர். பாபா படத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தினர். இதற்கெல்லாம் காரணம் ரஜினி அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான்.  ஆனால் இப்போது ரஜினி விரைவில் அரசியலில் குதிக்க இருக்கும் நிலையில், ராமதாஸ் மவுனம் காக்கிறார்.

 

அதுஒருபுறமிருந்துவிட்டுப்போகட்டும்... இப்போது ராமதாஸ் கிளப்பும் பிரச்னைகளை கையில் வைத்துக் கொண்டு திமுகவுக்கு எதிராக கம்பு சுற்றி வருகிறார்கள் ரஜினி ஆதரவாளர்கள். விஷயம் இதுதான், "முரசொலி நில விவகாரத்தில் ஸ்டாலின் சவால் விட்டதெல்லாம் வெற்றுச் சவடால் தானா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்து ஸ்டாலினை சீண்டி இருந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் இப்போது தமிழகத்தில் விவாதப்பொருளாகி இருக்கிறது. 

இந்நிலையில் #முரசொலி_பல்டி என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூகவலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். பாமக கிளப்பிய இந்த விவகாரத்தை ரஜினி ஆதரவாளர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதில், பலரும் கீழ்வரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!