முரசொலி பஞ்சமி நில விவகாரம்... ஆஜராகாத உதயநிதி ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Nov 19, 2019, 4:21 PM IST
Highlights

முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ஆஜராக ஆணையிட்டும் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகவில்லை. 
 

சாஸ்திரி பவனில் நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அவர் வரவில்லை.  முரசொலி பஞ்சமி நிலமா? என்கிற விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அரசு தரப்பில் தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.  சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியும் விசாரணையில் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். மனுதாரராக பாஜக நிர்வாகி சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.  கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சாஸ்திரி பவனில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

மடியிலே கனமில்லை. நாங்கள் தகுந்த ஆதரத்தை காட்டினோம். ஆனால் புகார் மனு அளித்தவர் வாய்தா கேட்டுவிட்டார். அதேபோல் தலைமை செயலாளர் சண்முகமும் அவகாசம் கேட்டுள்ளார். ஆகையால் இன்றே இந்த வழக்கு முடிந்து விடும் எனக் கருதுகிறோம். இந்த ஆணையருக்கு இந்த விசாரணை செய்ய அதிகாரமில்லை. பட்டியல் இனத்தவர் ஆணையர் இந்த விசாரணை நடத்த அதிகாரமில்லை. இந்த பிரச்னையை கிளப்பிய ராமதாஸ் மீதும், புகார் கொடுத்த பாஜக நிர்வாகி சீனிவாசன் மீதும் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறோம். 

இதுகுறித்து யார் ஆதாரம் கொடுத்தாலும் எந்த இடத்திற்கும் வரத் தயார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சாஸ்திரி பவனில் நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அவர் வரவில்லை.  

click me!