முரசொலி விவகாரம்...!! ஆதாயம் கிடைக்கும் என்றால் அந்தர்பல்டி: ஆகாச பல்டி எல்லாம் அடித்துக்காட்டுவார் ராமதாஸ்! பதிலுக்கு சீண்டிய தி.மு.க டி.கே.எஸ் இளங்கோவன்.

By Thiraviaraj RMFirst Published Jan 30, 2020, 11:54 PM IST
Highlights

அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவகல்லூரி ஊழல் விசாரணையில் தடை படும்.மத்திய அமைச்சரவையில் தன் மகனுக்கு இடம் கிடைக்கும் என்கிற நப்பாசையின் காரணமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
எங்கள் தலைவர் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்று நிருபிக்க தயாரா? என்று கேட்ட கேள்விக்கு இன்றைக்கு வரைக்கும் பதில் இல்லை. ஆதாயம் கிடைக்கும் என்றால் அந்தர்பல்டி: ஆகாச பல்டி எல்லாம் ராமதாஸ் அடித்துக்காட்டுவார்

“முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால் அந்த பட்ட வெளியிட்டது.அரசியலில் இருந்து விலகத் தயாரா? ஏன்று சவால் விட்டதெல்லாம் வெற்று சவடால்தானா” என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று டவிட்டர் பக்கத்தில் திமுக தலைவா ஸ்டானினை மீண்டும் வம்புக்கு இழுந்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில.....
“முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே அப்படியானால் அந்த பட்ட வெளியிட்டது. அரசியிலில் விலகத்தயாரா, என்று கேட்டதெல்லாம் வெற்று சவடால் தானா என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது பந்தயம் கட்டி படுதோல்வி அடைந்தவரின் பரிதாபத்தை பிரதிபலிக்கின்றது.
பாட்டாளிகளுக்காக இயக்கம் தொடங்கி வன்னியர் சங்க அறக்கட்டளையைத் தன் பெயருக்கே மாற்றிக்கொண்டதைப் போன்று முரசொலி அலுவலக விவகாரம் என்று டாக்டர் ராமதாஸ் நினைத்;திருக்கிறார். வீண்பழி சுமத்தி  முரசொலியின் அறக்கட்டளை பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஆதராமாக அதற்குரிய பட்டாவை வெளியிட்டோம். முணுமுணுப்பே இல்லாமல் சில வாரங்கள் அமைதி காத்தார். இப்போது  பழையபடி வாடகைக் கட்டிடம் என்று புதிய பல்லவியை தொடங்கி திமுகவை வம்புக்கு இழுத்திருக்கிறார்
 பஞ்சமி நிலம் என்று சொன்னதை நிருபிக்க முடியவில்லை. அவரைத் தூண்டிவிட்ட பாஜக வாலும் நிருபிக்க முடியவில்லை.  தேசிய பட்டியலின பழங்குடியினர் ஆணையத்தின் விசாரணையில்  புகார் அளித்தவர்கள் எல்லாம் புறமுதுகிட்டு  கால அவகாசம் கேட்டு கலைந்து சென்றார்கள். தான் சொன்ன பொய்யை விழுங்கவும் முடியாமல் நிருபிக்கவும் முடியாமல் தவிக்கிறார். அதிமுக வின் ஊழல்களை திசை திருப்ப இரவு பகலாக பணியாற்றுகிறாரோ என்று சந்தேகின்றேன். தவறு செய்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தால் அவரது பெருந்தன்மை என்று விட்டிருக்கலாம். நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர் கொள்ள வேண்டிய ராமதாஸ் இப்போதும் கூட தவறை உணருவதாக இல்லை. அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவகல்லூரி ஊழல் விசாரணையில் தடை படும்.மத்திய அமைச்சரவையில் தன் மகனுக்கு இடம் கிடைக்கும் என்கிற நப்பாசையின் காரணமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
எங்கள் தலைவர் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்று நிருபிக்க தயாரா? என்று கேட்ட கேள்விக்கு இன்றைக்கு வரைக்கும் பதில் இல்லை. ஆதாயம் கிடைக்கும் என்றால் அந்தர்பல்டி: ஆகாச பல்டி எல்லாம் ராமதாஸ் அடித்துக்காட்டுவார் என்பதை நாடறியும். அதில் அவர் கில்லாடி என்பதற்கு  அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவர் அடித்துள்ள பல்டிகளையெல்லாம் பட்டியல் இட ஏடு கொள்ளாது.
அதிமுக பாமக கூட்டணிக்காக தைலாபுரத்தில் நடந்த ரகசியப் பேரம் மறந்து போகும்” அதிமுக ஊழல்களை திசை திருப்பலாம் மத்திய பாஜக அரசின் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு வாக்களித்து  சிறுபான்மை மற்றும் ஈழத்தழிழர்களுக்கு இழைத்த துரோகத்தை எளிதில் மக்கள் மனதில் இருந்து அகற்றி விடலாம் என்றெல்லாம் நினைத்தால் தயவு செய்து  அப்படியொரு கனவைக் காணவேண்டாம் என்று இப்போதும் கூட டாக்டர் ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையில் வைத்துள்ள மரியாதையின் காரணமாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

T.Balamurukan
 

click me!