ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை..!! விஜய் சேதுபதிக்காக முத்தையா முரளிதரன் உருக்கம்.

Published : Oct 19, 2020, 03:55 PM ISTUpdated : Oct 19, 2020, 03:57 PM IST
ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை..!! விஜய் சேதுபதிக்காக முத்தையா முரளிதரன் உருக்கம்.

சுருக்கம்

என்னுடைய சுயசரிதை படத்தில் நடித்து ஒரு தலைசிறந்த திரைக் கலைஞர் தன்னுடைய எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை எனவும், எனவே 800 திரைப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக் கொள்ளலாம் எனவும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கோரிக்கை வித்துள்ளார்  

என்னுடைய சுயசரிதை படத்தில் நடித்து ஒரு தலைசிறந்த திரைக் கலைஞர் தன்னுடைய எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை எனவும், எனவே 800 திரைப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக் கொள்ளலாம் எனவும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கோரிக்கை வித்துள்ளார்  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:

 எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீது உள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில் வருங்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரைகேட்டுக்கொள்கிறேன். 

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒரு போதும் நான் சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்று இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கிறது. நிச்சயம் இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். 

இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ளார் நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும். அரசியல் பிரமுகர்களுக்கும். தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும், விஜய்சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்தையா முரளிதரனின் கோரிக்கையை ஏற்று விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முரளிதரனின் கோரிக்கை கடித த்தை மேற்கொள் காட்டி நன்றி வணக்கம் என்று அவர் 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!