
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்யும் கே.பி.முனுசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவை கே.பி.முனுசாமி தன் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்
சசிகலா எதிர்ப்பாளர்கள், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள், கே.பி முனுசாமி ஆதரவாளர்கள் என்று மூன்று தரப்பு அதிமுவினரும் இப்போது கே.பி முனுசாமிக்கு ஆதரவாக அணி திரண்டுள்ளனர்.
அதன் வெளிப்பாடாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் ஒரு பகுதியில் கே.பி. முனுசாமிக்கு ஆதரவாக கிராமங்கள் தோறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இது அதிமுக தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்த கே.பி. முனுசாமியை அதிமுக தலைமை சரிகட்டுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.