உடைந்துபோன முக்கொம்பு அணை ! ஓராண்டாகியும் சரி செய்யாததால் விவசாயிகள் வேதனை !!

By Selvanayagam P  |  First Published Aug 13, 2019, 8:37 AM IST

கடந்த ஆகஸ்ட் மாதம் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் திறக்கப்பட்டதால் உடைந்து போன முக்கொம்பு அணை இது வரை சரிசெய்யப்படாததால் இந்த ஆண்டும் நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பி வழிந்த நிலையில் அங்கிருந்து அதிகப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் திருச்சியை அடுத்த முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்தன.  இதனால் காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது.

இதையடுத்து உடைந்த அணையிலிருந்து கீழ் திசையில் 75 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Latest Videos

undefined

இது தொடர்பாக வெளியிடப்பட்ட  அரசாணையில், 1 லிருந்து 45 மதகுகளை கொண்ட தென் கொள்ளிடம் கதவணைகளும், அடுத்து 10 மதகுகள் கொண்ட வட கொள்ளிடம் கதவணைகளும் என 55 மதகுகள் கட்ட 387 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்ப ஒரு வருஷம் ஆச்சு. புதிய அணை கட்டுவதற்கான எந்தப் பணிகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர் தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் வேகமாக நிரம்பி வருகிறது.

தற்போது மேட்டூர் அணை 100 அடியைத் தொட்டுள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும். இதனால் அங்கிருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதுவரை முக்கொம்பு அணை சரி செய்யப்பபடாததால் இந்த ஆண்டும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும் நிலை உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

click me!