திமுக இளைஞரணியைக் கூட்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்.. மா.செ.க்கள் மீது புகார் வாசிக்க தயாராகும் உதயநிதி படை?

By Asianet TamilFirst Published Aug 13, 2019, 7:28 AM IST
Highlights

தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் இக்கூட்டத்தை நடத்தினால் தாங்காது என்பதால், தனியார் ஓட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உதயநிதி இளைஞரணி செயலாளரான பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

சென்னையில் திமுக இளைஞரணி அமைப்பாளர்களின் கூட்டத்துக்கு அதன் மாநில செயலாளர் உதயநிதி ஏற்பாடு செய்திருக்கிறார். இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மீது இளைஞரணி நிர்வாகிகள் புகார் வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திமுக இளைஞரணி செயலாளராக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்களை உதயநிதி நடத்தினார். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக இளைஞரணி அமைப்பாளர்களின் கூட்டத்தை நடத்த உதயநிதி ஸ்டாலின் விரும்பினார். அதன் அடிப்படையில் தற்போது திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் வரும் 25-ம் தேதி கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள கில்டன் ஓட்டலில் நடைபெறுகிறது. இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறும். இதி, மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் இக்கூட்டத்தை நடத்தினால் தாங்காது என்பதால், தனியார் ஓட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உதயநிதி இளைஞரணி செயலாளரான பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் திமுக இளைஞரணியினரை கண்டுகொள்வதில்லை என்ற புகார் நீண்ட காலமாக உள்ளது. ஏற்கனவே நடந்தக் கூட்டத்தில் இப்புகாரை இளைஞரணியினர் முன்வைத்து சென்றனர். இந்நிலையில் முழுமையாக இளைஞரணி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதால், திமுக மாவட்ட செயலாளர்கள் மீது இளைஞரணி நிர்வாகிகள் புகார் வாசிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!