இந்தியாவின் மாஸ்டர் பிளான் , கதிகலங்கிய சீனா... பின் வாங்கியது பாகிஸ்தான்...

By Selvanayagam PFirst Published Aug 13, 2019, 8:01 AM IST
Highlights

சீனா கொண்டு வந்துள்ள சட்ட  மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கில்  சர்வதேசவிமான நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது 

அண்டை நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசம் ஆங்காங். இங்கு சீனா கடுமையான சட்ட திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.
இங்கு கொலை, கொள்ளை, போதை பொருள் வைத்திருத்தல் ,சீனாவிற்கு எதிராக பேசுவது. போன்றவற்றை கிரிமினல் குற்றமாக கருதப்படும் வகையிலும், அப்படி குற்றத்தில் ஈடுபடுபவர்களை சீனாவிற்கு  நாடு கடத்தி  தண்டனை வழங்குவது

அங்கேயே வழக்கு நடத்தும் வகையில் புதிய சட்ட மசோதாவை சீனா கொண்டு வந்துள்ளது. தங்களை சீனா அடிமை படுத்துவதாக கூறி வரும் ஆங்காங் மக்கள், பதிய சட்ட மசோதாவிற்கு  எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்நிலையில் ஹாங்காங்கில் சர்வதேச விமான நிலையத்தை , போராட்டக்காரர்கள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், சீனாவிற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். விமான நிலைய பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  விமான நிலைய சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால். ஆங்காங் கிளடுத்து விமான பயணம் மேற்கொள்ள யாரும் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என விமான சேவை துறை அறிவித்துள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்து வந்த நிலையில். தற்போது தன்னுடைய அண்டை மாநிலமான ஹாங்காங்கில் சீனா  ஆதிக்கத்தை செலுத்தி வருவது சர்வதேச அளவில் சர்ச்சையை, ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை காஷ்மீர் பிரச்சனையில் சீனா தலையிடும் பட்சத்தில்  ஹாங்காங் பிரச்சனையை கையிலெடுக்க இந்தியா  முடிவு செய்துள்ளது.

இதனை அறிந்து கொண்ட சீனா தற்போதைக்கு இந்தியாவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது .

click me!