அம்பானி வீட்டில் அடுத்தடுத்து திருமணம்…. காதலரை மணக்கிறார் மகள் இஷா அம்பானி…..

Asianet News Tamil  
Published : May 07, 2018, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
அம்பானி வீட்டில் அடுத்தடுத்து திருமணம்…. காதலரை மணக்கிறார் மகள் இஷா அம்பானி…..

சுருக்கம்

Mugesh Ambani family marriage this year

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமல் கம்பெனி அதிபரின் மகன் ஆனந்த்தும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து வரும் டிசம்பரில் அவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீத்தா அம்பானி. இந்த தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமலை காதலித்து வருகிறார். இது வரை ரகசியமாக இருந்த இவர்கள் காதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனந்த் பிரமல் –இஷா அம்பானி இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்  இஷா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இரு குடும்பத்தினரும் நேற்று மும்பையில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு சென்றனர். இவர்களது திருமணம் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் பிரமலின் தந்தை அஜய் பிரமல் மிகப்பெரிய தொழிலதிபர். அவர், நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமல் நிறுவனத்தை உருவாக்கியவர் . ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த், தனது தந்தையின் நிறுவனத்தை கவனித்து வருவதைத் தவிர, புதிதாக இரண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா - மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி குடும்பத்தில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து திருமணங்கள் நடைபெறவுள்ளன.

PREV
click me!

Recommended Stories

ஜெட் வேகத்தில் பலமாகும் பாஜக..! இடிந்து விழும் கம்யூனிஸ்ட் கோட்டை.. பீதியில் காங்கிரஸ்..!
இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!