"இது மிகப்பெரிய துரோகம்..இது தவறு.." கொந்தளித்த திருமா.. யாரை சொல்கிறார் ?

Published : Mar 15, 2022, 05:53 AM IST
"இது மிகப்பெரிய துரோகம்..இது தவறு.." கொந்தளித்த திருமா.. யாரை சொல்கிறார் ?

சுருக்கம்

'ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்னும் கனவுத் திட்டத்தை நிறைவேற்றவே ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்துச் சிதறடித்தது இந்த அரசு. இது இமாலயத் தவறு. அம்மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதி' என்று பேசியிருக்கிறார் தொல்.திருமாவளவன்.

பட்ஜெட் கூட்டத்தொடர் :

நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கிய நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

பின்னர் ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட்டிற்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பங்கேற்றார். 

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் :

அப்போது பேசிய திருமாவளவன், 'ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மாபெரும் தவறாகும். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் ராணுவ ஆட்சியே நீடிக்கிறது. ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்னும் கனவுத் திட்டத்தை நிறைவேற்றவே ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்துச் சிதறடித்தது இந்த அரசு. இது இமாலயத் தவறு. அம்மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதி ஆகும். 

பாகிஸ்தானோடு இணையாமல் நிபந்தனைகளின் அடிப்படையில் நம்மோடு இணைந்த அம்மக்களுக்குச் செய்த  நம்பிக்கைத் துரோகம். அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சனநாயகப் படுகொலை. இன்னும் அங்கே இயல்புநிலை திரும்பவில்லை. ஆனால் அப்படியொரு தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதைக் கைவிட வேண்டும். 

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய  நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை அமைத்து அப்பகுதியைப் பார்வையிட அனுப்ப வேண்டும். அத்துடன் அம்மக்களின் கருத்தறிய பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும். அவர்களின் விருப்பப் படி அரசு முடிவெடுக்க வேண்டும். மீண்டும் அதனைத் தனித்தன்மையுடன் கூடிய மாநிலமாக அறிவிக்க வேண்டும்' என்று பேசினார்  திருமாவளவன்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!