
கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக எம்.பி.மைத்ரேயன் சந்தித்து பேசி வருவதால் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது
EPS-OPS அணிகள் ஒன்றாக இணைந்து,தினகரன் அணிக்கு எதிராக மாறி தற்போது இரட்டை இலை சின்னத்தையும் பெற்று அதிமுக என்ற கட்சிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையை பெற்றனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும்,பன்னீர் செல்வம் துணை முதல்வராகவும் இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி சொல்லி பார்த்தால் தான் தெரிகிறது...
முதல்வருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும் துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவதிற்கும் எந்த அளவிற்கு மாறுபடுகிறது என்பதை இன்றைய சம்பவம் படம் பிடித்து காட்டுகிறது
மதுரையில் இன்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு,துணை முதல்வர் பன்னீர் செல்வதை அழைக்கவும் இல்லை....அழைப்பிதழில் பன்னீர் செல்வத்தின் பெயரும் இடம் பெறவில்லை.
இதன் காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக எம்.பி. மைத்ரேயன் திடீரென சந்தித்து பேசி வருகிறார்.
இதற்கு முன்னதாக, சமீபத்தில் கூட "அணிகள் இணைந்தது ஆனால் மனங்கள் இணையவில்லை என தனது பேஸ்புக் பக்கத்தில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே ஒபிஎஸ் அணியை ஒதுக்குவதாக பலமுறை பேச்சு அடிபட்டு வந்த நிலையில், மைத்ரேயனின் ஆளுநர் உடனான இன்றைய திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.